பாடசாலைகளுக்கான தரப்படுத்தலை நீக்கும் கூகுள்! - அமைச்சர் வரவேற்பு!!

17 சித்திரை 2025 வியாழன் 14:26 | பார்வைகள் : 746
Map செயலியில் இருந்து பாடசாலைகளுக்கான நட்சத்திர தரப்படுத்தலை கூகுள் நிறுவனம் நீக்க உள்ளது. இந்த முடிவினை கல்வி அமைச்சர் வரவேற்றுள்ளார்.
ஏப்ரல் மாத இறுதிக்குப் பின்னர், கூகுள் மேப்பில் காட்டப்படும் பாடசாலைகளுக்கு பொதுமக்கள் எவரும் விமர்சனமோ, தரப்படுத்தலோ, நட்சத்திர ரேட்டிங் போன்றவற்றை சமர்ப்பிக்க முடியாது எனவும், கருத்துக்களும் பகிர முடியாது எனவும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேவேளை முன்னர் பதிவேற்றிய அனைத்து தகவல்களும் நீக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
பாடசாலைகள் மீதான கருத்துக்கள் கூகுள் செயலியில் பதிவேற்றுவது தொடர்பில் பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் தொழிற்சங்கம் கண்டனம் தெரிவித்து வந்ததிருந்தது. அதை அடுத்து இறுதியாக அந்த கோரிக்கையை கூகுள் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.
ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் கூகுள் Map செயலியில் இருந்து மேற்படி அனைத்து தரவுகளும் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.