Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் மக்களுக்கு நற்செய்தி! - வருகிறது இலவச நீச்சல் தடாகம்!

 பரிஸ் மக்களுக்கு நற்செய்தி! - வருகிறது இலவச நீச்சல் தடாகம்!

20 ஐப்பசி 2016 வியாழன் 10:30 | பார்வைகள் : 21861


ஒரு சில தனியார் விடுதிகளை தவிர்த்து பொதுமக்களுக்கான நீச்சல் தடாகத்தை பரிசுக்குள் தேடி கண்டுபிடிப்பது குப்பைமேட்டில் குண்டுமணி தேடுவதுபோலாகும்! இதோ... அதற்கு ஒரு ஏற்பாடு வந்துவிட்டது.
 
பரிஸ் நகர வாசிகளுக்காக இலவச நீச்சல் தடாகம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 2017 கோடை காலத்தில் நீங்க குஷியோ குஷியாக நீச்சல் அடிக்கலாம்! பரிசின் 19 ஆம் வட்டாரத்தில் ஓரு Quai de la Loire ஓடையில்.. மூன்று நீச்சல் தடாகங்களை முதல் கட்டமாக அமைக்க திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.  ஆறு ஓடிக்கொண்டே இருக்கும்... அதை குறுக்கறுத்து நீச்சல் தடாகம் அமைக்கவிருக்கிறார்கள். நீச்சல் தடாகத்தின் தண்ணீர் அதுவாகவே மாற்றம் கண்டுவிடும். 
 
மூன்று வித அளவுகளில், 40 சென்டிமீட்டர், 120 சென்டிமீட்டர் மற்றும் 2 மீட்டர் ஆளம் கொண்ட தடாகங்கள் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்குமான நீச்சல் தடாகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறகென்ன..? அடுத்த கோடை விடுமுறைக்கு கடல் தேடி தூர பயணம் போக தேவையில்லை தானே??!!

வர்த்தக‌ விளம்பரங்கள்