மக்ரோனின் Six Pack உண்மையா??

14 வைகாசி 2017 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 21317
இரு வாரங்களுக்கு முன்னர், 'பிரான்சின் அடுத்த ஜனாதிபதி யார்?' என்ற கேள்வி.. பிரெஞ்சு மக்களை ஆக்கிரமித்திருந்தது. தற்போது Garçon பத்திரிகை வெளியிட்டுள்ள அட்டைப்படத்தில் புதிய ஜனாதிபதி மக்ரோன் 6 Pack உடல்கட்டுடன் இருப்பது உண்மையானதா? என்ற கேள்வி ஆட்டிப்படைக்கிறது...
பல்வேறு தரப்பில் இருந்து இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்தவண்ணம் உள்ளது. இம்மானுவல் மக்ரோனோ, மக்ரோனுக்கு நெருக்கமானவர்கள் இது குறித்து வாயே திறக்கவில்லை. 'மக்ரோன் தனது தனிப்பட்ட விடயங்களில் மிக அவதானமாக இருப்பார்!' என சில அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இது கணணி உதவியுடன் கிராஃபிக்ஸ் செய்யப்பட்ட புகைபடம் என பலர் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.
Garçon பத்திரிகை, சும்மா பரபரப்புக்காக இந்த வேலையை செய்துள்ளது எனவும் சிலர் தெரிவிக்கின்றனர். இந்த சந்தேகத்தை மேலும் சில காரணங்கள் வலுப்படுத்துகிறது. இம்மானுவல் மக்ரோன் வேறு எந்த புகைப்படங்களிலும் இதுபோல் இல்லை என்பதும், கடற்கரையிலோ, உடற்பயிற்சிக்கூடத்திலோ எடுக்கப்பட்ட எந்த புகைப்படங்களும் இணையத்தில் இல்லை. இது ஒரு முக்கிய காரணம்.
தவிர, இந்த புகைப்படம் போலி என்றால், Garçon பத்திரிகை ஏன் இவ்வாறு செய்யவேண்டும் என கேள்வி எழுந்துள்ளது.
அட இந்த மர்மத்த சீக்கிரம் கண்டுபிடியுங்கப்பா...!!
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025