ஜனாதிபதி François Mitterrand இன் நான்கு கால் நண்பன்!!
17 வைகாசி 2017 புதன் 11:30 | பார்வைகள் : 22219
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி François Mitterrand ஒரு நாய் வளர்த்தார். பின்னர் அது ஒரு உருக்கமான வரலாறானது!!
ஐந்தாம் குடியரின் ஜனாதிபதிகளில், இரு தடவைகள் தொடர்ச்சியாக ஜனாதிபதியா இருந்த ஒரே ஜனாதிபதி François Mitterrand ஆவார்.. இவரிடம் Baltic எனும் நான்கு கால் நண்பன் ஒருவன் இருந்தான். குறித்த Baltic எனும் நாயை மிக கண்ணும் கருத்துமாக பாசமாக வளர்த்தார். காலையில் நடை பயில்வதில் ஆரம்பித்து, ஜனாதிபதி மாளிகைக்கு பாதுகாப்புக்கு வருவது வரை, உடன் இருக்கும்.
இது தவிர, ஜனாதிபதி Mitterrand ஒரு 'ஏற்றுக்கொள்ள முடியாத' காரியத்தைச் செய்தார். இந்த நாயை 'பொருளாதார மற்றும் சமூக சபை' உறுப்பினராக நியமித்தார். எட்டுத்திசைகளிலும் இருந்தும் விமர்சனங்கள் பறந்தன.
பின்னர் ஜனாதிபதி Mitterrand, ஒரு இலையுதிர் நாளில் உயிரிழந்தார். அப்போது இந்த நாய் தனிமையில் தள்ளப்பட்டது. ஜனாதிபதியின் இறுதிச்சடங்கில் தலையை தரை நோக்கி வைத்துக்கொண்டு... இடுகாடு வரை பின்னாலேயே வந்தது.
'நாய் என்பது வெறுமனே நாயல்ல. அது ஒரு பாதுகாவலன். அது ஒரு துணை... இரவிலும்... இறப்புக்கு பின்னரும்...' என Jacques Raoult என்பவரால் இறுதிச்சடங்கில் வைத்து தெரிவிக்கப்பட்டது.
உடனிருந்தவர்கள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan