கனார் பத்திரிகை அலுவலகத்துக்குள் நுழைந்த மர்ம நபர்!!

27 வைகாசி 2017 சனி 12:30 | பார்வைகள் : 20744
Canard enchaîné பத்திரிகை எப்போதும் 'வில்லங்கத்துக்குரியது!' அரசியல் வாதிகளை கண்காணித்து, அவர்கள் ஊழல்கள், ஏமாற்று வேலைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து.. அரசியல் வாழ்க்கையில் இருந்தே அவர்களை ஒதுங்க வைத்துவிடும். இதற்கு சமீபத்திய உதாரணம் பிரான்சுவா பியோன்! அவரின் அரசியல் சாம்ராஜ்யமே சரிந்துவிட்டது.
1973 ஆம் ஆண்டு அது... கனார் பத்திரிகையின் அலுவலகம்..!! டிசம்பர் 3 ஆம் திகதி ஒரு சம்பவம் இடம்பெற்றது. கனார் பத்திரிகைக்கு இதுமாதிரியான செய்திகள் கிடைப்பது எப்படி என உளவு பார்க்கவேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டது. அப்போதைய உள்துறை அமைசாராக இருந்தவர் Raymond Marcellin.
கனார் பத்திரிகை அலுவலகத்தில் தண்ணீர் குழாய் ஒன்று உடைத்துக்கொண்டுவிட, அந்த வேலையை செய்ய ஒரு ப்ளம்பர் (Plumber) அழைக்கப்பட்டார். சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு ப்ளம்பர் பல தட்டுமுட்டு சாமான்களோடு, கனார் அலுவலகத்துக்கு வந்து தண்ணீர் குழாயை சரி செய்ய ஆரம்பித்தார்.
தண்ணீர் குழாயில் திருத்த வேலைகளை நிறைவு செய்துகொண்டு, அலுவலகத்தை விட்டு வெளியேறும் போது, கனார் பத்திரிகை ஆசிரியர்கள் குழாம் ஒன்று குறித்த அந்த ப்ளம்பரை பரபரவென சுற்றி வளைத்தார்கள்.
ப்ளம்பர் ஒரு நிமிடம் திகைத்து நிற்க... நீ யார்? எங்கிருந்து வருகிறாய்..? உன் பெயர் என்ன...? போன்ற சரமாரி கேள்விகளால் பிளம்பரை துளைத்து எடுத்தனர். நிலைகுலைந்த அந்த ப்ளம்பர்... உண்மைகளை சொல்கிறார்.
வந்திருந்த ப்ளம்பர், பிராந்திய கண்காணிப்பு இயக்குநரகத்தைச் (DST) சேர்ந்த காவல்துறை அதிகாரி என வந்திருந்த நபர் குறிப்பிட்டார். தனது அடையாள அட்டையையும் காண்பித்தார். அவரை சுற்றி வளைத்ததற்கு காரணம், குறித்த அதிகாரி கனார் பத்திரிகை அலுவலகத்தின் 'ஆசிரியர் பகுதி'யில் இரகசியமாக சிறிய ரக 'மைக்' (ஒலிவாங்கி) ஒன்றை பொருத்தியுள்ளார். இதை அலுவலக பணியாளர்கள் இரகசியமாக கண்காணித்துள்ளனர்.
பின்னர் இந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டும், பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிராக அரசு செயற்படுகிறது என குற்றஞ்சாட்டப்பட்டும்... பல சர்ச்சைகள் கிளம்பின. தொடர்ந்து இது பல அரசியல் சிக்கல்களுக்கும் வழி வகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது!!
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025