பிரான்சில் அதிகூடிய வெப்பம் பதிவானது எப்போது?

18 ஆனி 2017 ஞாயிறு 18:30 | பார்வைகள் : 20321
என்னா வெய்யில்.. அப்பாடி.. என நெற்றியில் உள்ள வேர்வைத் துளிகளை துடைத்தவாறே பதிவை வாசிக்க ஆரம்பிக்கும் உங்களுக்கு பல ஆச்சரிய செய்திகள் காத்திருக்கின்றன.
பிரான்சில் அதிகூடிய வெப்பம் எப்போது நிலவியது? சொல்கிறோம். அதற்கு முன்னர், பிரான்ஸ் 1870 ஆம் ஆண்டில் இருந்து தான் வெப்பநிலையை பதிவேற்றி வருகிறது. அதற்கு முன்னர் நிலவில் எந்த காலநிலை தரவுகளும் இல்லை என்பது தான் சோகம். இந்த பட்டியல் கூட 1870 ஆம் ஆண்டுக்கு பின்னர் பதிவான தரவுகளை வைத்தே பிரிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் அதிக வெப்பம் நிலவிய ஆண்டு 2003 ஆம் ஆண்டு. அன்று ஓகஸ்ட் 12 ஆம் திகதி, பிரெஞ்சு வானிலை ஆய்வு மைய்யம் ஒரு செய்தியினை அறிவிக்கிறது. 'வரலாறு காணாத வெப்பம் இன்று பதிவாகும். யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்!' என்பதே அந்த செய்தி!
நாடு முழுவதும் அரேபிய தேசங்கள் போல் அனல் அள்ளி வீசி தகதகக்க வைத்தது. பரிஸ் மக்கள் பாடு பெரும்பாடாய் போய்விட்டது. அன்று Gard மாவட்டத்தின் Conqueyrac நகர் மற்றும் Saint-Christol-lès-Alès ஆகிய நகரங்களில் பதிவான வெப்பத்தின் அளவை பார்த்து பிரெஞ்சு வானிலை ஆய்வு மைய்யம் பதறுகிறது.
44.1 செல்சியஸ் (111.3 F) வெப்பம் அன்றைய நாளில் பதிவானது. 1870 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிரான்ஸ் அன்றுதான் அப்படி ஒரு வெப்பத்தை உணருகிறது.
அவசர அவசரமாக இதற்கு முந்தைய 'ரெக்கோர்ட்' எது என தேடிப்பிடிக்க... 1923 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று Toulouse நகரில் பதிவான 44 செல்சியஸ் வெப்பமே அதுவரை அதிகூடியதாக இருந்தது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025