நூற்றாண்டுகள் கடந்த சேவையில் அமெரிக்க மருத்துவமனை! - தோற்றமும் வரலாறும்!

23 மாசி 2017 வியாழன் 11:30 | பார்வைகள் : 22230
பரிசில் அமைந்துள்ள 'American Hospital of Paris' மருத்துவமனை 110 வருடங்களை தாண்டி, சேவை செய்து வருகிறது. மருத்துவமனையின் தோற்றமும் வரலாறும்.. இன்றைய பிரெஞ்சு புதினத்தில்!!
1906 ஆம் ஆண்டு இலாப நோக்கற்றதாக ஆரம்பிக்கப்பட்டது இந்த மருத்துவமனை! Neuilly-sur-Seine இல் அமைந்துள்ள இந்த மருத்துவமனை நவீன மருத்துவ உலகின் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. அனைத்து வித சேவைகளையும், மருத்துவ கருவிகளையும் கொண்டுள்ளது. மேலும் அவசரப்பிரிவு 24 மணிநேர சேவையினை வழங்குகிறது.
அமெரிக்க மற்றும் பிரெஞ்சு அரசின் எந்த நிதி மற்றும் உதவிகளை பெறாமல் தன்னிச்சையான நிதி சேகரிப்பில் ஈடுபட்டு இயங்கி வருகிறது. உடல் உறுப்பு மற்றும் இரத்த தானம் உலகம் முழுவதிலும் இருந்து பெறப்படுகிறது.
அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் தன் சேவையினை ஆற்றி வருகிறது இவ் மருத்துவமனை. மேலும் அவர்களின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக சிறப்பு மருத்துவ பிரிவு மருத்துவர்களை இணம் கண்டு, சந்திப்பதற்குரிய நேரத்தினை உறுதி செய்யலாம்.
முதலாம் உலகப்போரின் போதும், இரண்டாம் உலகப்போரின் போதும் பலருக்கு இலவச சிகிச்சைகள் அளித்தது இந்த மருத்துவமனை என்பது மேலதிக தகவல்!!
முகவரி : 63 Boulevard Victor Hugo, 92200 Neuilly-sur-Seine, தொலைபேசி இலக்கம் : +33 1 46 41 25 25
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025