55 யூரோக்களுக்கு விற்கப்பட்ட மகிழுந்து!
4 பங்குனி 2017 சனி 14:30 | பார்வைகள் : 22538
பழைய பொருட்கள் எல்லாவற்றையும் ஏலத்தில் விட்டு, பணப்பெட்டியை நிரப்பிக்கொண்டு செல்லும் செய்தியினை தான் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறோம்... , ஆனால் இது புதுசு! Peugeot நிறுவனத்தைச் சேர்ந்த மகிழுந்து ஒன்று 55 யூரோக்களுக்கு விற்கப்பட்டுள்ளது. அட... வெறும் 55 யூரோக்களுக்குத்தான்.
குறித்த இந்த மகிழுந்து Beignon (Morbihan நகரத்தில் கடந்த 41 வருடங்களாக இயங்காமல் ஒரே இடத்தில் இருந்துள்ளது. இந்த மகிழுந்தின் கண்ணாடியில் '76' என ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்.. அதன் பிறப்பு ஆண்டை குறிகிறது. 1976 ஆம் ஆண்டில் இருந்து தனக்கான முதலாளியை தேடிக்கொண்டுள்ளது. வாகனத்தின் டயர்கள் மற்றும் சில பாகங்கள் மாத்திரமே செலலிழந்த நிலையில், அப்பகுதி 'மெக்கானிக்' ஒருவர் 'நல்ல' விலை ஒன்றுக்கு பேசி முடித்து... மகிழுந்தை வாங்கியுள்ளார். அதுதான்.. மேலே குறிப்பிட்ட 55 யூரோக்கள்!!
Peugeot 404 வகை மகிழுந்து தற்போது இதே நிலையில் வாங்கவேண்டும் என்றால் 3000 யூரோக்களில் இருந்து 15,000 யூரோக்கள் வரை வேண்டுமாம்... மேலும் இந்த குறித்த மகிழுந்தின் புதிய 'ஓனர்' மகிழுந்தை மிக விரைவில் மீள் நிர்மாணிக்க உள்ளாராம்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan