முன்னாள் மனைவிக்கு பூனையை ஏவிவிட்டு கடிக்க வைத்த கணவர்!

16 பங்குனி 2017 வியாழன் 10:30 | பார்வைகள் : 22237
தினமும் இதுபோன்ற வில்லங்கமான சம்பவங்கள் நாடு முழுவதும் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன... இதோ... ஒருவர் தனது முன்னாள் மனையிடம், பூனையை ஏவி கடிக்க விட்டு.. தற்போது நீதிமன்றத்துக்கு வந்துள்ளது வழக்கு...!!
சம்பவம் 2013 ஆம் ஆண்டு Yvelinesஇல் இடம்பெற்றுள்ளது. Fontenay-le-Fleury பகுதியில் வசிக்கும் பெண்மணி ஒருவர் காவல்நிலையம் சென்று, ஒரு புகார் ஒன்றை அளித்தார்.
" என் முன்னாள் கணவர் வளர்க்கும் பூனை ஒன்று என் பேரனைக் கடித்துவிட்டது. இதற்கு முன்னாள் கணவர் தான் காரணம்" என..!
அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் இந்த வழக்கை எடுத்துக்கொண்டனர். அவர்கள் துருவித் துருவி விசாரித்ததில், 11 வயதுடைய பேரன் பூனையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் போது அது பேரனைக் கீறி காயப்படுத்திவிட்டது. அந்த பூனை குறித்த பெண்மணியின் முன்னாள் கணவரது பூனையாகும்.
இதை எப்படி வழக்காக எடுத்துக்கொள்வது என்ற குழப்பம் காவல்துறையினருக்கு... வழக்கு நீதிமன்றத்துக்கு வர... 16,000 யூரோக்கள் நஷ்ட ஈடு கேட்டிருக்கிறார் குறித்த பெண்மணி! காவல்துறையினர் மயங்கி விழாத குறைதான்! இப்போது பூனையின் உரிமையாளருக்கு காவல்துறையினர் 'அழைப்பாணை' அனுப்பியுள்ளார்கள்!
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025