Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

மிஸ் பிரான்ஸ் அழகிப்போட்டியின் நிபந்தனைகள் குறித்து தெரியுமா?

மிஸ் பிரான்ஸ் அழகிப்போட்டியின் நிபந்தனைகள் குறித்து தெரியுமா?

17 மார்கழி 2017 ஞாயிறு 14:30 | பார்வைகள் : 23186


தற்போது 2018 ஆம் ஆண்டுக்கான அழகிப்போட்டி இடம்பெற்று முடிந்துள்ளது. இது குறித்த செய்திகளை எமது தளத்தில் படித்திருப்பீர்கள்.. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் 'மிஸ் பிரான்ஸ்' அழகிப்போட்டிக்கு தயாராக விதிக்கப்படும் நிபந்தனைகள் குறித்து பார்க்கலாம்...!!

மிஸ் பிரான்ஸ் போட்டியில் பங்கேற்க நிச்சயம் ஒரு பெண்ணாக இருக்கவேண்டும். (சிரிக்காதீர்கள்... முதல் கண்டிஷன் அதுதான்!)

18 வயதில் இருந்து 24 வயதுக்குள் இருக்கவேண்டும். அதுவும் அவ்வருட நவம்பர் 15 ஆம் திகதிக்குள் இந்த வயது வரம்பை கொண்டிருக்கவேண்டும்.  கட்டாயமாக பிரெஞ்சு குடியுரிமை கொண்டிருக்கவேண்டும்.

1.70 மீட்டர்களுக்கு குறையாமல் உயரமாக இருக்கவேண்டும்.

ஒருபோதும் திருமணமோ அல்லது குழந்தைகளோ பெற்றுக்கொண்டிருக்க கூடாது.

காவல்நிலையத்தில் நீங்கள் அளித்த புகார்களை தவிர, உங்கள் மீது ஒரு புகாரும் இருக்கக்கூடாது. கோப்புகள் எல்லாம் அட்சர சுத்தமாக இருக்கவேண்டும்!

மிக குறிப்பாக, உங்கள் மீதான நன்மதிப்பு எங்கேயும் கெட்டுவிட்டிருக்க கூடாது. குழந்தைகளை கிள்ளினார்.. பொது இடத்தில் இயல்பு மீறி நடந்தார் என ஊடகம் வெளிச்சம் போட்டு காட்டினால் முடிந்தது கதை!!

பிளாஸ்டிக் சர்ஜரி, மார்பகத்தை பெரிதாக்குவது, முக மாற்று சிகிச்சை.. இதெல்லாம் அறவே கூடாது! இயற்கையான உடல்வாகு கொண்டிருக்கவேண்டும்.

பொய்யான கூந்தல், கண்களில் பொருத்தப்படும் 'கொண்டாக்ட் லென்ஸ்', நீச்சல் உடை அணிந்திருக்கும் போது வெளியில் தெரியும் டாட்டூக்கள் (அட பாவிங்களா..??!!) இதெல்லாம் இருந்தால் போட்டிக்கு சேர்த்துக்கொள்ளப்பட மாட்டீர்கள்!

காதணி அணியும் துளையை தவிர, செயற்கையாக உடலில் எந்த துளைகளும் இட்டிருக்க கூடாது. மூக்குத்தி.. தொப்புளில் துளையிட்டு வளையம் மாட்டினால் கவுண்டமணி சொல்வது போல் ரிஜெக்ட்டு ரிஜெக்ட்டு..!! 

மிக முக்கியமான இறுதி குறிப்பு இது தான்.. போட்டிக்கு முன்னரோ, இல்லை அதன் பின்னரோ... முழு நிர்வாணமாக 'போஸ்' கொடுப்பதற்கு தடை!! ( நம் அழகிகளுக்கு அது மகா கஷ்ட்டம் ஆச்சே??!) முன்னதாக நிர்வாண போஸ் கொடுத்திருந்தால் அப்பவும் நீங்கள் ரிஜெக்ட்டு!!

சரி.. இத்தனை தகமை உங்களுக்கு இருந்தால்.. 2019 ஆம் ஆண்டுக்கான போட்டியில் கலந்துகொள்ளலாமே??!! 

வர்த்தக‌ விளம்பரங்கள்