Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

Isabelle Geneviève எனும் இசைவடிவம்! - நேற்றைய தொடர்ச்சி!!

Isabelle Geneviève எனும் இசைவடிவம்! - நேற்றைய தொடர்ச்சி!!

10 தை 2018 புதன் 13:33 | பார்வைகள் : 21143


பிரெஞ்சு பாடகி France Gall தன் பதினாறு வயதில் தனது முதலாவது பாடலை வெளியிட்டார். 
 
இசையமைப்பாள மற்றும் இசை கோர்வையாளர் Alain Goraguer இடம் உதவியாளராக பணியாற்றிய Gall, 'Ne sois pas si bête' எனும் பாடலை வெளியிட்டார். இந்த பாடல் அவரின் 16 வது பிறந்தநாள் அன்று வெளியானது. 
 
குறித்த  இசைத்தட்டு, இலட்சம் சீடிக்கள் விற்பனையாகி அசுர சாதனை படைத்தது. இதுவே அவரை மொத்த பிரெஞ்சு தேசத்துக்கும் அடையாளம் காட்டியது. 
 
பின்னர் அடுத்தடுத்து இசைத்தட்டுக்கள்.. பாடல்கள்.. வசீரக குரலால் பாடல்கள் அனைத்தும் வெற்றிபெற, செல்வமும் புகழும் மலைபோல் குவிந்தது. 
 
தொலைக்காட்சி திரைப்படத்தில் நடிக்க வாய்பு கிடைத்தது. அமெரிக்க திரைப்பட வாய்ப்பும் கிடைத்தது. 
 
1967 ஆம் ஆண்டு ஒரு சர்ச்சை ஏற்பட்டது. பிரெஞ்சு பாடகர் Maurice Biraud உடன் ஒரு 'டூயட்' பாடல் பாடினார். அந்த பாடல் மிகப்பெரும் சர்ச்சையில் முடிந்தது. 
 
இளம் பெண், அவளின் தோழியின் தந்தையால் கவரப்படுவதாக தயாரிக்கப்பட்ட  "La Petite' எனும் பாடல் மிக சர்ச்சைக்குள்ளானது. 
 
Gall க்கு ஜெர்மன் மொழியில் பற்றும், அதை நன்கு கற்றும் வைத்திருந்தார். பாடல்களும் பாடியுள்ளார். 1967 ஆம் ஆண்டு ஜெர்மனிய மொழியில் பாடிய Love, l'amour und Liebe எனும் பாடல் மிகப்பெரும் வெற்றி பெற்றது. 
 
அதுவரை பலருடன் இணைந்து பணியாற்றிய  Gall, பின்னர் சொந்த தயாரிப்பில், சொந்த நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து இசைத்தட்டுக்களை வெளியிட்டார். 
 
அவையும் வெற்றிபெற, பிரெஞ்சு தேசத்தின் எல்லைகளை கடந்து புகழ் உலகம் முழுவதும் பரவியது. 
 
இவரது பாடல்களில் அனேகமானவை Yé-yé இசைவடிவத்தை கொண்டது.. அது குறித்த ஒரு சுவாரஷ்ய பதிவு...
 
நாளை!!

வர்த்தக‌ விளம்பரங்கள்