Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

தீவை எரித்த எரிமலை! - ஒரு கண்ணீர் தொடர்...!!

தீவை எரித்த எரிமலை! - ஒரு கண்ணீர் தொடர்...!!

12 மாசி 2018 திங்கள் 10:30 | பார்வைகள் : 23157


ஏப்ரல் 7 ஆம் திகதி. காலை 4 மணி. மூச்சுத்திணறல் போன்று சுவாசிக்க பெரும் சிரமத்துடனே விடிந்தது. காரணம் சாம்பல் துகள். வேக வேகமாக எழுந்து வீட்டுக்குள் இருந்து வெளியேறிய மக்கள்.. Pelée மலையை வெறித்துப்பார்த்தனர். 
 
மலை முகட்டில் இருந்து பிரம்மாண்டமாய் கரும் சாம்பல்கள் எழுந்து.. வானத்தில் கலந்து கொண்டிருந்தது. நாளை காலை ஊரைக் காலி செய்வது என மக்கள் தங்களுக்குள் முடிவெடுத்துக்கொண்டனர். ஆனால், ஏப்ரல் 7, அன்று மாலையே மலையில் கோபம் தணிந்தது. புகையோ.. சாம்பல் துகளோ கிளம்பவில்லை. மக்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு வீட்டுக்குள் இரவைக் கழிக்கலாகினர். 
 
ஏப்ரல் 8. 1902 ஆம் ஆண்டு. காலை  Saint-Pierre நகரம் உறங்கிக்கொண்டிருக்கும் போது, காது ஜவ்வுகள் கிழிந்துவிடுமாய்ப்போல் 'தட தட' என பாரிய சத்தம் எழுந்தது. மலைப்பாறைகள் உருண்டு ஓடின.. Pelée மலையின் எரிமலை கூம்புகளை உடைத்துக்கொண்டு எரிமலை குழம்புகள் வெளியேறின. 
 
இரத்தச்சிவப்பும் செம்மஞ்சளும் சேர்ந்தார்ப்போல் வெளியேறிய குழம்புகள் அதிவேகமாய் ஊருக்குள் பாய்ந்தோடியது. சூரியன் பூமி மீது விழுந்தது போல் அத்தனை வெப்பம். வழியில் நின்றிருந்த மரங்களை ஒரு நொடியிலும் குறைவான நேரத்தில் கருக்கியது. 
 
முளைத்து நின்ற கரும்பாறைகள் நொடியில் முழு வெப்பமாகியது. எரிமலை குழம்பின் மொத்த வெப்பம் 1,075 °C. (விஞ்ஞானம் என்ன சொல்கிறதென்றால்.. 80 °C வெப்பத்தை தான் மனித உடல் அதிகபட்சமாக தாங்கும் என்று) மலையில் இருந்து தொடர்ச்சியாக எரிமலை குழம்புகள் கக்கிகொண்டே இருந்தது. 
 
எரிமலை குழம்புகளை கவனித்திருக்கிறீர்களா... நன்றாக கரைத்த தோசை மாவு போல் கெட்டியாக இருக்கும். எதனோடும் ஒட்டிக்கொண்டால் அதை இல்லாமல் செய்து.. தன்னை நிலைநாட்டிக்கொண்டு தொடர்ந்து முன்னேறும். 
 
மலையை விட்டு கன நொடியில் இறங்கிய எரிமலை குழம்புகள் Saint-Pierre நகருக்குள் இறங்கியது. அவசர அவசரமாக 'ஆபத்து.. எரிமலை வெடித்துள்ளது' என டெலிகிராம் ஒன்று அனுப்ப முயல.. கம்பிகள் அறுந்து அந்த செய்தி அங்கேயே முடங்கியது. 
 
Saint-Pierre கிராமத்தில் வசித்த முப்பதாயிரம் பேர் ஒரு சில நொடிகளில் உயிரிழந்த 19 ஆம் நூற்றாண்டின் வரலாறு காணாத மிகப்பெரும் அழிவாக உருமாறியது. 
 
-நாளை. 

வர்த்தக‌ விளம்பரங்கள்