பிரெஞ்சு வீதிகளின் வானொலி தோழன்!!
4 புரட்டாசி 2017 திங்கள் 10:30 | பார்வைகள் : 21269
நெடுஞ்சாலைகளில் பயணிப்பது ஒரு அலாதி பிரியம் தான். பேச்சு துணைக்கு ஆள் இருந்தால் உங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. ஆனால் உங்கள் பயணம் தனியே என்றால்??!! கவலையை விடுங்கள்... உங்களுடன் பயணிப்பதற்கே ஒரு வானொலி உள்ளது!!
Sanef என அழைக்கப்படும் இந்த வானொலி 107.7 எனும் FM அலைவரிசையில் 24 மணிநேரமும் ஒலிக்கிறது. இந்த வானொலியின் சிறப்பம்சம் என்னவென்றால்.. நீங்கள் பிரான்சின் எந்த நெடுஞ்சாலையில் பயணித்தாலும் மிக துல்லியமாக உங்கள் வானொலியில் ஒலிக்கும். ஆம்.. பிரத்யேகமாக வீதிகளுக்கென ஒலிபரப்படும் வானொலி தான் இது.
நாட்டின் நான்கு திசைகளிலும் பயணிக்கும் நீங்கள், உங்கள் சாலையின் போக்குவரத்து நெரிசல் (Traffic) செய்திகள் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒருதடவை அறிவித்துக்கொண்டே இருக்கும். மழை, பனிப்பொழிவு, விபத்து.. இடி மின்னல் புயல் என எந்த அறிவித்தல் என்றாலும் உங்களுக்கு தொடர்ச்சியாக அறிவித்தல் கொடுத்துக்கொண்டே இருக்கும்.
"La route avec vous" என்பதுதான் இந்த வானொலியின் தாரக மந்திரம். 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வானொலி தற்போது அன்ட்ரோயிட், அப்பிள் தொலைபேசிகளிலும் App ஆக கிடைக்கிறது. தற்போது மேலதிக வசதியாக நாட்டின் சூடான செய்திகளையும் ஒற்றை வரியில் வழங்குகிறார்கள்.
உங்கள் தனிமைப்பயணத்தின் போது உற்ற நண்பனாக இந்த Sanef வானொலி உடன் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!!
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan