மக்ரோனின் காதலை பிரித்த பெற்றோர்!!
6 கார்த்திகை 2017 திங்கள் 14:30 | பார்வைகள் : 24490
காதலை பிரிக்கும் பழக்கம் உலகம் முழுவதும் இருக்கும் போல... ஆனானப்பட்ட மக்ரோனின் காதலையே, அவரின் பெற்றோர்கள் பிரித்துள்ளனர்.
மக்ரோனுக்கும் பிரிஜித் மக்ரோனுக்கும் இருக்கும் பாசப்பிணைப்பு வாசர்கள் அறிந்தது தான். பிரிஜித்தை முதன் முதலாக மக்ரோன் பார்க்கும் போது அவருக்கு 15 வயது!
மக்ரோனின் ஆசிரியர் தான் பிரிஜித். இருவருக்கும் 25 வயது வித்தியாசம். பிரேமம் படத்தில் வருவது போல், 'டீச்சர்' மீது காதல் வந்தது.. இந்த காதல் Amiens இல் உள்ள La Providence லீசேயில் வளர்ந்தது.
மூன்று வருடங்கள் ஓட... மக்ரோனுக்கு 18 வயது ஆனது. காதலர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வசிக்க ஆரம்பிக்க... மக்ரோனின் பெற்றோர்கள் குறுக்கே கட்டையை போட்டார்கள்.. 'இது.. சும்மா அஃபெக்ஷன் மட்டும்தான்!' என இருவரையும் பிரித்து.. மக்ரோனை பரிசுக்கு உயர்கல்விக்காக அனுப்பி வைத்துவிட்டனர்.
மக்ரோன் பரிசில் தனது உயர்கல்வியை முடித்துக்கொண்டு, 2007 ஆம் ஆண்டு தனது 30 வது வயதில் பிரிஜித்தை திருமணம் செய்துகொண்டார்.
அதற்கு ஒருவருடத்துக்கு முன்பாகத்தான் பிரிஜித் தனது முன்னாள் கணவர் André-Louis Auzière ஐ, விவாகரத்து செய்திருந்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan