The Railway ஓவியமும் - பிரெஞ்சு தொடரூந்து நிலையமும்..!!
23 ஆடி 2018 திங்கள் 10:30 | பார்வைகள் : 22607
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் The Railway எனும் ஓவியம் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தினமும் பலரால் பார்வையிடப்படும் இந்த ஓவியத்துக்கு பின்னால் சிலபல கதைகள் உண்டு...!!
பரிசில் உள்ள இரண்டாவது மிக 'பிஸி'யான தொடரூந்து நிலையமான Gare Saint-Lazare தொடரூந்து நிலையத்துக்கு பின்னால், ஓவியர் Édouard Manet சில வருடங்கள் வசித்தார்.
ஒரு நாள் பொழுது போகவில்லையே....என ஒரு ஓவியத்தை வரைந்தார். பெண் ஒருவர் மடியில் நாய்க்குட்டி ஒன்றை வைத்துக்கொண்டும், அதேவேளை கையில் புத்தகம் ஒன்றையும் வைத்து வாசித்துக்கொண்டு இருக்க, அருகில் சிறுமி ஒருத்தி தொடரூந்து தண்டவாளத்துக்கு போடப்பட்ட கம்பிகள் வழியே தொடரூந்தை பார்த்துக்கொண்டிருப்பதாக ஒரு ஓவியத்தை வரைந்தார்.
Victorine Meurent எனும் ஒரு 'மொடல்' பெண்ணை இருக்க வைத்து இந்த ஓவியத்தை Manet வரைந்திருந்தார்.
ஓவியத்துக்கு The Railway என பெயர் சூட்டப்பட்டது. இந்த ஓவியத்தில் தொடரூந்துகள் எதுவும் இல்லை என்றபோதும் இது, 'Gare Saint-Lazare' நிலையத்தின் பின்னணியை கொண்டே வரைந்துள்ளார்.
இந்த ஓவியம் வரையப்பட்ட ஆண்டு 1873. பின்னர் தேசிய ஓவிய அருங்காட்சியகம் (வொஷிங்டன்) க்கு 1956 ஆம் ஆண்டு இந்த ஓவியத்தை அன்பளிப்பாக பிரெஞ்சு அரசு வழங்கியது.
அதன் பின்னர் ஓவியம் மெல்ல மெல்ல புகழடையத்தொடங்கிற்று;

5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan