பரிசின் அழகை கெடுக்கிறதா மொம்பர்னாஸ் கட்டிடம்!!?
26 பங்குனி 2018 திங்கள் 10:30 | பார்வைகள் : 22228
நீங்கள் எத்தனையோ தடவை அளவு கணக்கில்லாமல் மொம்பர்னாஸ் கட்டிடத்தை பார்வையிட்டிருப்பீர்கள்... அது அத்தனை அழகான கட்டிடமா??
இல்லை. இல்லவே இல்லை என்கின்றார்கள் சிலர்.
கட்டிடம் 1969 ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1973 ஆம் ஆண்டு கட்டு முடிக்கப்பட்டது. 58 மாடிகளை கொண்ட இந்த கட்டிடம் மொத்தம் 210 மீட்டர்கள் உயரம் கொண்டது. இதையெல்லாம் விட்டுத்தள்ளுங்கள்... இந்த கட்டிடம் அழகானதா எனும் கேள்விக்கு இல்லை எனவே பதிலளிக்கிறார்கள்.
அக்கம் பக்கத்தில் இதே உயரம் கொண்ட வேறு கட்டிடங்கள் இல்லாமையினால் இது தனித்த கட்டிடம் ஆகிவிட்டது. அதுவும் கறுப்பு நிறத்திலான இந்த கட்டிடத்தின் வெளித்தோற்றம் பார்ப்பதற்கு அத்தனை அழகாய் இல்லை என்கிறார்கள் சில விமர்சகர்கள்.
பிரபல சுற்றுலா ஏற்பாட்டர்களான Trip Advisor நிறுவனத்தின் கிளை இணையத்தளமான Virtualtourist இணையத்தளத்தில் 2008 ஆம் ஆண்டு ஒரு கருத்துக்கணிப்பு பொதுமக்களிடையே எடுக்கப்பட்டது. அதில் உலகின் இரண்டாவது 'அசிங்கமான' கட்டிடமாக மொம்பர்னாஸ் கட்டிடம் தேர்வாகியுள்ளது.
முதல் இடத்தில் அமெரிக்காவில் உள்ள Boston City Hall கட்டிடம் உள்ளது. தயவு செய்து அதை கூகுள் செய்து பார்த்துவிடாதீர்கள்!!
மொம்பர்னாஸ் கட்டிடம், ஈஃபிள் கோபுரத்தின் அழகையும் சேர்த்து கெடுக்கிறது எனவும் ஒரு கோஷ்டி கோஷம் எழுப்புகிறது... அது சரி.. ஈஃபிள் கோபுரத்தையே அகற்றச்சொல்லி ஒரு கூட்டம் கொடி பிடிக்கின்றதுதானே...??!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan