ஈஃபிள் கோபுரத்தில் - கொள்ளையர்களை பந்தாடிய ஜாக்கி சான்!!
26 சித்திரை 2018 வியாழன் 11:30 | பார்வைகள் : 22206
ஈஃபிள் கோபுரம் எத்தனையோ திரைப்படங்களில் எல்லாம் வந்திருக்கின்றது. நாமும் பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஆனால் இது கொஞ்சம் வித்தியாசம்...!!
அமெரிக்காவில் X-man உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் Brett Ratner, ஜாக்கிசானை வைத்து Rush Hour சீரீஸ் திரைப்படங்களை எடுத்து வருகிறார்.
கொங்-ஹாங் நகர காவல்துறையாக - லீ (ஜாக்கிச்சான்) அவனது நண்பனாக James Carter (கிரிஸ் டக்கர்) இருவரும் சேர்ந்து நடிந்த இந்த Rush Hour திரைப்படங்கள் அனைத்தும் சூப்ப்ர் டூப்பர் ஹிட் ஆவதுடன், வசூலையும் வாரி குவிக்கும்.
அதன் மூன்றாவது பாகம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியானது. ஒரு குற்றக்கும்பலை பின் தொடர்ந்து, அவர்களை கைது செய்யும் வேலை என சாதாரண கதை என்றாலும், அதிரடியையும், நகைச்சுவையையும் நம்பி திரைக்கதை அமைத்திருப்பார்கள். அதன் க்ளைமேக்ஸ் ஈஃபிள் கோபுரத்தில் வந்து முடியும்.
ஈஃபிள் கோபுரத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள உணவத்தில் (அட... மக்ரோன் கூட அமெரிக்க ஜனாதிபதிக்கு விருந்து கொடுத்தாரே... அந்த ஹோட்டல் தான்பா..), ஜாக்கிச்சானும் வில்லனும் எதிராளியின் கழுத்தில் கத்தி வைத்திருக்க, துப்பாக்கியுடன் என்ட்ரி கொடுக்கும் கிரிஸ் டக்கர், 'இன்னொரு தாயின் வயிற்றின் பிறந்த அவன், என்னுடைய சகோதரன்!' என் பஞ்ச் டயலாக் பேசுவார். அங்கு ஆரம்பிக்கிறது கண்ணாபின்னா சண்டை. அங்கிருக்கும் தளபாடங்கள் எல்லாம் அடித்து நொருக்கும் அளவுக்கு பெரும் சண்டை வில்லனுக்கும் ஜாக்கிச்சானுக்கும் இடையே இடம்பெறும்.
அதன் பின்னர் அங்கிருந்து வெளியே கோபுரத்தின் கம்பிகளுக்கு தாவி, அங்கும் இருவரும் சண்டையிட்டுக்கொள்வார்கள்.
கோபுரத்தின் சிறிய சிறிய கம்பிகளுக்கூடாக நுழைந்து சந்து பொந்தெல்லாம் புகுந்து இருவரும் சண்டையிட, பல சிரமங்களுக்கு மத்தியில் அதை அட்டகாசமாக படமாக்கியிருப்பார்கள்.
அதன் பின்னர், ஈஃபிள் கோபுரத்தில் இருந்து நண்பர்கள் இருவரும், மிகப்பெரிய துணி ஒன்றினை பாரஷூட்டாக பயன்படுத்தி, அங்கிருந்து பறந்து சென்று ஈஃபிளின் முன்னால் உள்ள நீச்சல் தடாகத்தில் விழுவார்கள்.
நாம் அறிந்தவரையில் ஈஃபிள் கோபுரத்தில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டது இந்த ஒரு திரைப்படத்தில் தான்.
திரைப்படத்தை தவற விட்டிருந்தால், YouTubeஇல் அந்த கட்சி உள்ளது. நேரில் சென்று பார்த்தால் கூட ஈஃபிள் கோபுரத்தினை இந்தனை 'ஆங்கிள்' களில் பார்க்க முடியாது. அவசியம் தவறவிடாமல் பாருங்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan