ஈஃபிள் கோபுரத்தின் கீழ் விமானத்தை செலுத்தி சாகசம்! - ஒரு வெற்றிக்கதை!!

4 வைகாசி 2018 வெள்ளி 13:30 | பார்வைகள் : 22364
ஈஃபிள் கோபுரத்தின் கால்களுக்கிடையே விமானத்தை செலுத்தி மறுபக்கத்தால் செல்லலாமா..?? வரலாற்றில் பல தடவைகள் இது போன்ற சாதனைகள் இடம்பெற்று அனைத்தும் தோல்வியில் முடிந்தது. ஒரு சிலர் விபத்துக்குள்ளாகி இறக்கவும் நேர்ந்தது. ஆனால் ஒரு வெற்றிக்கதையும் உண்டு...!!
அவர் பெயர் Robert J. Moriarty!! அமெரிக்கர்!!
அவர் அமெரிக்காவின் United States Marine Corps படையில் பணிபுரிந்ததோடு, பல்வேறு சாதனைகளுக்கும் சொந்தக்காரரராக உள்ளார். முதலாவது சாதனை, இவர் தான் மிக அமெரிக்காவின் மிக இள வயது விமானி. 20 வயதில் விமானப்படையில் போர் புரியத்தொடங்கினார்.
ஆனால் அதெல்லாம் அமெரிக்காவின் வரலாறு, அதை விட்டுவிடுவோம்.
இவர் தன்னுடைய 37 வது வயதில், 1984 ஆம் ஆண்டு ஒரு வியத்தகு சாதனை மேற்கொண்டார்.
அவ்வருடத்தின் மார்ச் மாதம், 31 ஆம் திகதி காலை 11.20 மணிக்கு, ஈஃபிள் கோபுரத்தின் கால்களுக்கிடையே தனது Beechcraft Bonanza எனும் அமெரிக்க போர் விமானம் மூலம் பறந்தார்.
அவரது ஆடையில் சிறியரக கமரா ஒன்றை பொருத்தி, ஒளிப்பதிவு செய்ய விட்டுக்கொண்டு, விமானத்தால் ஈஃபிள் கோபுரத்தை நெருங்கி, சடாரென கீழே விமானத்தை பதித்து, ஈஃபிள் கோபுரத்தின் கீழ் கால்களுக்கால் பறந்து, வெளியே வந்து மேலெழும்பி பறந்தார்.
நீங்கள் ஏன் செய்தீர்கள், என கேள்வி கேட்கப்பட, 'சும்மா ஜாலிக்கு செய்தேன்!' என சிரித்துக்கொண்டே பதில் கூறினார்.
(கொசுறு செய்தி : இவர் சாகசம் நிகழ்த்திய காணொளி, YouTube இணையத்தில் உள்ளது. தேடி பார்த்து ரசிக்கவும்!)
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025