ஜனாதிபதிக்கென ஒரு தீவு!!
11 வைகாசி 2018 வெள்ளி 14:30 | பார்வைகள் : 21567
பிரெஞ்சு ஜனாதிபதி தங்குவதற்கு என எலிசே மாளிகை உள்ளது. இது தவிர, ஜனாதிபதியின் வீடு என ஒன்று இருக்கும். ஆனால், உங்களுக்குத் தெரியுமா... பிரெஞ்சு ஜனாதிபதிக்கு என 'மட்டும்' ஒரு தீவு உள்ளது.
முதன் முறையாக பிரெஞ்சு ஜனாதிபதி சாள்-து-கோல் இங்கு தங்கியிருந்தார். 1968 ஆம் ஆண்டு இந்த தீவு, ஜனாதிபதிக்கு மட்டும் என அறிவிக்ககப்பட்டது. சுற்றிலும் கடல், தீவில் பாதுகாப்பான அரண்மனை. அரண்மனைக்குள் வசதியான தங்குமிடம் என சகல வசதிகளோடும் உள்ளது இந்த தீவு!!
சாள்-து-கோலுக்கு பின்னர், யாரும் பெரிதாக இங்கு செல்லவில்லை. நீண்ட நாட்கள் கழித்து முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷி தனது முன்னாள் மனைவி Cecilia உடன் ஒருதடவை இங்கு தங்கினார்.
அதன் பின்னர், ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து தனது மனைவி Valérie Trierweiler உடன் இங்கு சிறிய ஓய்வுக்காக சென்றிருந்தார்.
இந்த தீவை, இங்குள்ள அரண்மனையை பராமரிப்பதற்காக அரசுக்கு, வருடத்துக்கு €200,000 யூரோக்கள் ஆகின்றதாம். கிட்டத்தட்ட பயன்படுத்தவே படாத ஒரு தீவுக்கு வருடம் €200,000 யூரோக்கள் என்பது யானை கட்டி தீனி போடும் கதை தான் அரசுக்கு...!!
சொல்ல மறந்துவிட்டோமே, நாளை நம் தற்போதைய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது மனைவி பிரிஜித் மக்ரோனுடன் இத்தீவுக்கு இரு நாட்கள் பயணமாக செல்கின்றார்...!!
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan