Trop belle pour toi !!
5 மார்கழி 2018 புதன் 10:30 | பார்வைகள் : 24449
Bernard என்பவர் ஒரு மகிழுந்து விற்பன்னர். BMW போன்ற ஆடம்பர மகிழுந்துகளை வாங்குவதும் விற்பதும் போன்ற தொழில் செய்து வருகின்றார். அவர் Florence எனும் அழகிய பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார்.
மனைவி அழகாக இருந்த போதும், அவரின் உதவியாளராக பணி புரியும் மிக சாதாரண அழகுடைய குண்டான பெண்ணான Colette என்பவரை காதலிக்கின்றார். இந்த காதல் அவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றி அமைக்கின்றது...
1989 ஆம் ஆண்டு பிரெஞ்சில் வெளியான இந்த Trop belle pour toi எனும் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைகிறது.

இதின் Bernardன் மனைவியாக நடித்திருந்த Carole Bouquet, மிக அற்புதமாக நடித்திருந்தார். அற்புதமான முக பாவனைகளோடு, மிக அழகான வசன உச்சரிப்பும் உடல் மொழியும் கொண்டு அந்த கதாப்பாத்திரத்தை மெருகேற்றியிருபார்.
இத்தனைக்கும் இது ஒரு நகைச்சுவைத் திரைப்படம்.
1989 ஆம் வருடம் இடம்பெற்ற கேன்ஸ் சர்வதேச விருது நிகழ்வில் நடுவர்களின் சிறப்பு விருதாக Prix விருது இத்திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.
1990 ஆம் வருடம், César விருது விழாவில் கலந்துகொண்ட இத்திரைப்படம்... ஐந்து விருதுகளை வாரி குவித்தது.
சிறந்த திரைப்படம், சிறந்த எழுத்து, சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய ஐந்து பிரிவுகளில் விருதுகளை குவித்தது.

திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகின்றன. இன்றும் இத்திரைப்படம் ஒரு ஆச்சரியம் தான். இணையத்தில் இத்திரைப்படம் உள்ளது. அவசியம் பார்க்கவும்!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan