Jacques Chirac மீது தாக்குதல் முயற்சி! (வரலாற்றில் இருந்து...)
7 தை 2020 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 22407
சமீபத்தில் உயிரிழந்த முன்னாள் ஜனாதிபதி மீது ஒருதடவை துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருந்தது.
Bastille Day என அழைக்கப்படும் தேசிய நாள் நிகழ்வின் போது பரிசில் இச்சம்பவம் இடம்பெற்றது.
ஜூலை 14, 2002 ஆம் ஆண்டு சோம்ப்ஸ்-எலிசேயில் தேசிய நாள் நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது 'கிற்றார்' இசைக்கருவியின் பை ஒன்றுக்குள் கலிஃபர் வகை துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த ஒருவன், தாக்குதல் நடத்தினான்.
Jacques Chirac இராணுவ அணிவகுப்பை பார்வையிட்டுக்கொண்டிருந்த போது, 40-50 மீற்றர் தொலைவில் இருந்து ஆயுததாரி துப்பாக்கியால் சுட்டான்.
ஆனால் அதிஷ்ட்டவசமாக குண்டு ஜனாதிபதியை துளைக்கவில்லை. 25 வயதுடைய தாக்குதலாளி பின்னர் கைது செய்யப்பட்டான்.
22 mm வகை கலிஃபர் துப்பாக்கியை அவனிடம் இருந்து பறித்தார்கள். துப்பாக்கிக்குள் மேலும் நான்கு ரவைகள் இருந்தன.
'ஏன் தாக்குதல் நடத்தினாய்?' என கேட்டதற்கு அவனிடம் இருந்து வந்த பதில் என்ன தெரியுமா..?!
'நான் ஒரு நாஜி படை வீரன்' என குறிப்பிட்டான்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan