Merci - நூதன பொருட்கள் கொட்டிக்கிடக்கும் காட்சியறை..!!
2 மாசி 2020 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 22474
நீங்கள் மிக வித்தியாசமான பொருட்களை விரும்புகின்றவரா?? ஒரு மின் விளக்காக இருந்தாலும் கூட அதில் ஏதேனும் வித்தியாசத்தை விரும்புகின்றவரா நீங்கள்..? உங்களுக்குத் தான் இந்த பிரெஞ்சு புதினம்...
பரிசில் வித்தியாசமான நுணுக்கமான பொருட்கள் விற்கும் காட்சியறை தேடி அலைந்து இறுதியாக இந்த <<Merci>> காட்சியறையை கண்டுபிடித்தோம்.
அது ஏன் 'மெர்ஸி' என பெயர்..? காரணம் இருக்கு.. அதற்கு முன்னால்..
இந்த காட்சியறை மூன்று தளங்களை கொண்டது. சிறுவர்களுக்கான உடை, வீட்டு அலங்கார பொருட்கள், தளபாடங்கள், பாத்திரவகைகள் உட்பட பல உபயோகப்பொருட்களும் இங்கு விற்பனைக்கு உள்ளன.
மேஜை விளக்கு, கடிகாரம், தேநீர் குடுவை, கண்ணாடி போத்தல்கள் என குவிந்து கிடக்கும் பொருட்கள் எல்லாமே மிக வித்தியாசமான வடிவு கொண்டது.
'ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?' என உங்களை எண்ண வைக்கும் விதத்தில் மிக ரசனையான பொருட்கள் இங்கு உள்ளன.
தவிர இங்கு 'ஸ்டேஷனரி' வகைகளும் .... அதான் கல்வி உபகரணங்கள்.. இங்கு உள்ளன.
பரிசில் வசிக்கும் நீங்கள் ஒருதடவை இங்கு விஸிட் அடித்து ஏதேனும் வாங்கிக்கொள்ளுங்கள்.
மெர்ஸி என பெயர் வைத்ததற்கு காரணம் கேட்டீர்கள் அல்லவா?? இந்த கடை மூலம் வரும் ஒவ்வொரு யூரோவும் (லாபம்) 'தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன.
நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பின்னால் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நீங்கள் உதவி செய்கின்றீர்கள்... உதவி செய்தால் 'மெர்ஸி' சொல்லத்தானே வேண்டும்...??!!
(காலை 10 மணியில் இருந்து மாலை 7 மணிவரை திறக்கப்படும் இந்த காட்சியறை 111 boulevard Beaumarchais
Paris, 75003 எனும் முகவரியில் உள்ளது)
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan