உலகில் அதிகம்பேரால் பார்வையிடப்படும் இடுகாடு!!
20 ஆனி 2019 வியாழன் 16:30 | பார்வைகள் : 8853
அதிகமக்களால் பார்வையிடப்படும் சுற்றுலாத்தலங்கள் உலகில் பல உண்டு. இதில் முக்கியமானது ஈஃபிள் கோபுரம். நமது பரிசில் உள்ளது. சரி, உலகில் அதிகம் பேரால் பார்வையிடப்படும் 'மயானம்' அல்லது இடுகாடு எது தெரியுமா..??
அதுவும் நமது பரிசில் தான் உள்ளது.
பரிசில் உள்ள Père Lachaise Cemetery தான் அது.
பரிசில் உள்ள மிகப்பெரிய இடுகாடு இது இது. தவிர, உலகில் அதிகப்பேரால் பார்வையிடும் இடுகாடாகவும் இது உள்ளது.
மொத்தம் 110 ஏக்கர் ( 44 ஹெக்டேயர்கள்) பரப்பளவில் இந்த இடுகாடு உள்ளது.
இங்கு அதிகளவான மக்களும் சுற்றுலாப்பயணிகளும் படையெடுப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
எழுத்தாளர்கள், இயக்குனர்கள், தத்துவ ஆசான்கள், இராணுவ வீரர்கள், கவிஞர்கள், ஓவியர்கள் என பல 'பெரும் புள்ளிகள்' இங்கு புதைக்கப்பட்டுள்ளனர்.
தவிர, அவர்கள் புதைக்கப்பட்டதோடு அவர்களுக்காக கட்டப்பட்ட நினைவுத் தூபியும் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றது.
குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் கட்டப்பட்ட பல நினைவுத்தூபிகள் மிக அழகாகவும், கலை நயம் மிக்கதாகவும் உள்ளன.
சரி, நாம் முன்னர் சொன்னதுபோல் உலகில் அதிக மக்களால் பார்வையிடப்படுகின்ற இடுகாடாக இது உள்ளது என தெரிவித்தோம் இல்லையா??
வருடத்துக்கு 3.5 மில்லியன் மக்கள் இங்கு வருகை தருகின்றனர்.
அட... ஒரு இடுகாடை பார்க்க இத்தனை மில்லியன் மக்களா??!!
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan