Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : Louis Vuitton காட்சியறையில் மீண்டும் கொள்ளை!

பரிஸ் : Louis Vuitton காட்சியறையில் மீண்டும் கொள்ளை!

11 கார்த்திகை 2024 திங்கள் 18:37 | பார்வைகள் : 5820


பரிஸ் 6 ஆம் வட்டாரத்தின் Boulevard Saint-Germainபகுதியில் அமைந்துள்ள Louis Vuitton காட்சியறை இன்று திங்கட்கிழமை காலை கொள்ளையிடப்பட்டது.

நவம்பர் 11 ஆம் திகதி இன்று திங்கட்கிழமை காலை 4.30 மணி அளவில் அங்கு வேகமாக வந்த Audi நிறுவனத்துக்குச் சொந்தமான மகிழுந்து ஒன்று காட்சியறையின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளது.

அதில் இருந்த கொள்ளையர்கள் மூவர்கள் கடைக்குள் நுழைந்து அங்கிருந்த விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் A4 நெடுஞ்சாலை வழியாக தப்பி ஓடியுள்ளனர். கொள்ளையிடப்பட்ட பொருட்களின் மதிப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதே காட்சியறை கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்