Rédoine Faïd - மாயாவி..!! (பகுதி 5)
5 ஆடி 2019 வெள்ளி 10:30 | பார்வைகள் : 8570
சிறையில் இருந்து தப்பித்து, மீண்டும் கைது செய்யப்பட்டு Réau சிறையில் அடைக்கப்பட்டுள்ள Faïd, இம்முறை நிதானமாக செயற்பட தொடங்கினான்.
முதலில், சிறையில் இருந்து தப்பிக்கும் எந்த எண்ணமும் தமக்கு இல்லை என மற்றவர்களை நம்ப வைத்தான். அவர்களின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டான். தான் உண்டு தன் வேலை உண்டு என 'ரொம்ப நல்லவண்டா' என்பது மாதிரியே நடந்துகொண்டான். இதற்கு ஐந்து வருடங்கள் தேவைப்பட்டது.
2013 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டுவரை ஐந்து வருடங்கள் காத்திருந்த அவனுக்கு மீண்டும் தப்பிச் செல்வதற்குரிய நாள் வந்தது.
கடந்தவருடம், 2018 ஆம் ஆண்டு, ஜூலை 1 ஆம் திகதி, அமைதியாக விடிந்து, காலை உணவு பரிமாறப்பட்டு இருந்த அந்த வேளையில்,
காற்றை கிழித்துக்கொண்டு உலங்குவானூர்தி ஒன்று சிறைச்சாலையை வட்டமிட்டது.
அதில் மூன்று நபர்கள் ஆயுதத்துடன் இருந்தனர். உலங்குவானூர்தியில் இருந்து இறங்கிய இரண்டு கடத்தல்காரர்கள், சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திக்கொண்டு அங்கிருந்த கமாண்டோ அதிகாரியை பணயக்கைதியாக பிடித்துக்கொண்டனர். Faïd உலங்குவானூர்தியில் ஏறி தப்பிச் சென்றான்.
காலை 11:30 மணிக்கு ஆரம்பித்த இந்த சம்பவம், அடுத்த பத்து நிமிடங்களுக்குள்ளாக அனைத்தும் நிறைவடைந்து விட்டது.
அதிகாரிகள் அனைவரும் நடந்த சம்பவத்தை நம்ப முடியாமல் திகைத்து நின்றனர். சிறைக்கைதி மீண்டும் தப்பித்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது.
இந்த தப்பிச் செல்லும் திட்டம் அனைத்தும், சிறைச்சாலைக்குள் இருந்து Faïd இனால் மாத்திரம் வகுக்கப்பட்டது என பின்நாட்களில் தெரியவந்தது.
(தொடரும்...)
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan