Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : சிறுமியை கட்டிவைத்துவிட்டு கொள்ளை.. இருவர் தேடுதலில்..!!

பரிஸ் : சிறுமியை கட்டிவைத்துவிட்டு கொள்ளை.. இருவர் தேடுதலில்..!!

17 புரட்டாசி 2024 செவ்வாய் 10:14 | பார்வைகள் : 7288


13 வயதுடைய சிறுமி ஒருவரைக் கட்டிவைத்துவிட்டு, அவரது வீட்டில் இருந்து 15,000 யூரோக்கள் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. 13 வயதுடைய சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த இரு கொள்ளையர்கள், அச்சிறுமியை கத்தியின் மூலம் மிரட்டி, அச்சுறுத்தியுள்ளனர். பின்னர் கத்தி ஒன்றின் மூலம் அவரைக் கட்டிவைத்து விட்டு வீட்டில் இருந்த பணத்தினை திருடிச் சென்றுள்ளனர்.

பிற்பகல் 3.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

15,000 யூரோக்கள் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பி ஓடியுள்ள கொள்ளையர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்