10 மில்லியன் பயணிகளைச் சந்தித்த பரிஸ் விமானநிலையங்கள்!
17 புரட்டாசி 2024 செவ்வாய் 13:30 | பார்வைகள் : 1829
சாள்-து-கோல் மற்றும் ஓர்லி, Le Bourget ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 10.2 மில்லியன் பயணிகளைச் சந்தித்துள்ளன.
இந்த எண்ணிக்கை கடந்த வருட ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.7 % சதவீதம் அதிகமாகும். இந்த மூன்று விமான நிலையங்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள 20 விமான நிலையங்களை இயக்கி வரும் groupe ADP தெரிவித்த தகவல்களின் படி, அனைத்து விமானநிலையங்களையும் சேர்த்து கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 36 மில்லியன் பயணிகளைச் சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை 6.4% சதவீதத்தால் அதிகமாகும்.
பரிசில் பயணிகள் வருகை அதிகரித்தமைக்கான காரணம் அனைவரும் அறிந்ததே. ஒலிம்பிக் போட்டிகள் இம்முறை பரிசில் இடம்பெற்றதால் பரிஸ் விமான நிலையங்களில் அவை 10.2 மில்லியன் பயணிகளைச் சந்தித்திருந்தன.