Paristamil Navigation Paristamil advert login

தொலைக்காட்சி நாடகத்தில் தோன்றிய Porte de la Chapelle நிலையம்!!

தொலைக்காட்சி நாடகத்தில் தோன்றிய Porte de la Chapelle நிலையம்!!

19 சித்திரை 2021 திங்கள் 13:30 | பார்வைகள் : 22575


ரஷ் ஹவர் திரைப்படத்தின் முக்கிய சண்டைக் காட்சி ஒன்று ஈஃபிள் கோபுரத்தில் உள்ள உணவகத்தில் இடம்பெறுவதாக பிரெஞ்சு புதினம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தோம். அதை அடுத்து, இதுபோன்ற சுவாரஷ்ய தகவல்களை மேலும் அறியத்தாருங்கள் என பலர் கோரியிருந்தீர்கள். 
 
'நமக்கெல்லாம் மிகவும் பரீட்சையமான போர்த்து-லா-சப்பல் மெற்றோ நிலையம் ஒரு தொலைக்காட்சி நாடத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது. அது குறித்து இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்.
 
அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியான HBO தயாரித்து, மிகப்பெருமளவில் 'ஹிட்' அடித்த Band of Brothers சீரீஸ் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். வரலாற்று உண்மைய அடிப்படையாக கொண்டு 1992 ஆம் ஆண்டு Stephen E. Ambrose எனும் பிரபல எழுத்தாளர் ஒரு புத்தகத்தை எழுதியிருந்தார். இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது இயங்கிய ஒரு இராணுவ குழு ஒன்றை மையமாக கொண்டு எழுதப்பட்ட இந்த புத்தகத்தை அதே பெயரில் தொலைக்காட்சி நாடகமாக எடுத்திருந்தார்கள். 
 
அந்த நாடகத்தின் ஐந்தாம் அத்தியாயத்தி இந்த Porte de la Chapelle நிலையம் தோன்றியுள்ளது. 
 
ஹே... நம்ம ஸ்டேஷன் உலக பேமசுய்யா..!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்