ஈபிள் கோபுரத்துக்கு முன்பாக புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரபலங்கள்!!

2 வைகாசி 2021 ஞாயிறு 16:30 | பார்வைகள் : 23642
ஈபிள் கோபுரத்துக்கு முன்பாக நின்று ஒரு ‘செல்ஃபி’யாவது எடுத்துவிட வேண்டும் என்பது பலரது கனவு. நாம் தினமும் கடக்கும் ஈபிள் கோபுரத்திற்கு முன்பாக உலக பிரபலங்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அந்த ஜாலியான புகைப்படத்தொகுப்பு!!
தமிழில் இருந்து ஆரம்பிக்கலாம். இந்த போட்டோவில் இருப்பவர் யார் தெரிகிறதா..?? நமது இசைஞானி இளையராஜா. எண்பதுகளில் உலகம் முழுவதும் ‘டூர்’ அடித்த ராஜா.. ஈபிளுக்கு முன்பாக ஒய்யாரமாக நிற்கும் அரிய புகைப்படம் இது.

அமெரிக்கர்களுக்கு பரிசுக்கு விஸிட் அடிப்பது மிக பிடித்தமான ஒன்று. அதுவும் ஈஃபிள் என்றால் சொல்லவும் வேண்டுமா என்ன..? அமெரிக்காவின் முன்னாள் கனவுக்கன்னி Blake Lively ஒருதடவை பரிசுக்கு வந்து சென்றார். ஈஃபிளுக்கு முன்னால் போஸ் கொடுக்க தவறவில்லை.

அமெரிக்க நடிகர், இயக்குனர்.. தயாரிப்பாளர் என பல கெட்டப் போடும் Justin Theroux தனது கேமராவை பின்புறமாக திருப்பி எடுத்த “சுமார் செல்ஃபி’ இது!

Game of Thrones பிரபலம் Maisie Williams ஈஃபிளுக்கு முன்னால் ஒரு புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். ”மேடம் உங்க ‘பிங்’ கலர் தலைமுடி செம போங்க!

அமெரிக்க பாடகி Rihanna , நான் என தக்காளி தொக்கா என நினைத்துக்கொண்டு, ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் காட்சி இது. ஃபேஷன் ஷோவுக்கு ரெடியான Rihanna, அப்படியே ஒரு க்ளிக் என எடுத்துக்கொண்டார் இந்த புகைப்படத்தை.

பாடகி Mariah Carey பரிஸ் வந்திருந்தார். ஆடம்பர விடுதியில் தங்கியிருந்தபோது தான் இரவில் ஈஃபிள் ஜொலிப்பதை பார்த்துள்ளார். ஜன்னல் வழியாக ஈஃபிளை பார்த்து ரசித்ததோடு ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

அட்டகாசமான புகைப்படங்கள் தான் இல்லையா..?? இன்னும் இருக்கு பல.. நாளை உங்களுக்காக தொகுத்து தருகின்றோம். காத்திருங்கள்!
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1