பிரான்சின் மிக ஆபத்தான நகரம் எது..?

7 வைகாசி 2021 வெள்ளி 10:30 | பார்வைகள் : 23060
பிரான்சின் பல்வேறு நகரங்கள் உலக பேமஸ். பேமசாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தலைநகர் பரிஸ் எவ்வளவு புகழ்பெற்றது என்பது சொல்லித்தெரியவேண்டியயில்லை. பரிசுடன் போட்டிபோட்டுக்கொண்டே இருக்கும் இரு நகரங்கள் என்றால்.. லியோனும், மார்செயும் தான்.
வடிவேலு ஸ்டைலில் சொல்லவேண்டுமென்றால்.. போட்டிகள் ஆரோக்கியமாகவும் இருக்கும் அயோக்கியத்தனமாகவும் இருக்கும்.
நகரம் என்றால் குற்றச்செயல்களுக்கு பஞ்சமா என்ன,..??
காவல்துறையினரும், ஜொந்தாமினரும் சேர்ந்து நகர பாதுகாப்பில் மிக தீவிரமாக இயங்கிய போதும்.. ஆங்காங்கே துப்பாக்கிச்சூடுகளும், ஆட்கடத்தல்களும், கொள்ளைகளும், திருட்டுக்களும்... மிரட்டல்களும், குழு மோதல்களும், போதைப் பொருள் விற்பனையும் கொடிகட்டி பறக்கின்றன.
குறிப்பாக குற்றச்செயல்கள் கூடியநகரங்கள் பட்டியலில் தலைநகர் பரிஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 54.49 புள்ளிகளுடன் (கிரைம் ரேட்) பரிஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளது. பத்தாவது இடத்தில் போர்து நகரம் 45.10 புள்ளிகளுடன் உள்ளது.
குற்றச்செயல்களில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நகரம் எது தெரியுமா? மார்செ! அட... செய்திகளில் எப்போதும் ‘துப்பாக்கிச்சூடு’.. ஒருவர் பலி..மார்செயில் சம்பவம்!” என படிப்பதுண்டு. சம்பவம் செய்வதெல்லாம் சமோசா சாப்பிடுவது போன்று மார்செயின்களுக்கு. கிரைம் ரேட் இங்கு 60.77 புள்ளிகளாக உள்ளது.
குற்றச்செயல்களில் மார்செ நகரம் எப்போதும் போட்டிபோடுவது முதல் இடத்தில் உள்ள ‘நீஸ்’ நகரத்தோடுதான்.
அட.. ஆமாங்க! பிரான்சில் அதிக குற்றச்செயல்கள் இடம்பெறுவது நீஸ் நகரில் தான். நம்பவவே முடியவில்லை இல்லையா..? அழகான கடற்கரை நகரமான நீஸ் நகரத்தில் கிரைம் ரேட் 65.03 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
அவதானம். அடுத்தமுறை நீஸ் நகருக்கு செல்ல நேர்ந்தால் ‘உஷாரய்யா உஷாரு.. பணம் பத்தும் உஷாரு.. நகை நட்டும் உஷாரு!”
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1