தெரிந்த மெற்றோ! - தெரியாத தகவல்கள்..!! (பகுதி 1)

11 வைகாசி 2020 திங்கள் 10:30 | பார்வைகள் : 23387
பரிஸ் மாநகரத்துக்கு எத்தனையோ சிறப்புக்கள் / அடையாளங்கள் உள்ளன. ஈஃபிள் கோபுரம் அல்லது மோனலிசா ஓவியம் தாங்கிய லூவ்ர் அருங்காட்சியம் என அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
ஆனால் பரிசுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பெரிதும் ஆச்சரியப்படுவது இங்குள்ள போக்குவரத்து குறித்து தான்.
குறிப்பாக நீங்கள் மெற்றோ சேவைகளை எடுத்துக்கொண்டால், இது மிக 'துல்லியம்' எனலாம்.
இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பரிஸ் மெற்றோ சேவைகள் குறித்து பல ஆச்சரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
பரிசில் மொத்தமாக 302 மெற்றோ நிலையங்கள் உள்ளன. தினமும் நான்கு மில்லியன் மக்களுக்கும் மேல் இதனை பயன்படுத்துகிறார்கள். 2015 ஆம் ஆண்டு கணக்கின் படி 1.520 பில்லியன் மக்கள் மெற்றோக்களில் பயணித்துள்ளனர்.
மொத்தமாக 16 வழி சேவைகள் பரிசில் இயங்குகின்றன. 1 தொடக்கம் 14 வரையான சேவைகளுடன் 3bis மற்றும் 7bis எனும் மேலும் இரு சேவைகளும் இயங்குகின்றன.
ஐரோப்பானின் இரண்டாவது 'பிஸி'யான மெற்றோ சேவைகள் இதுவாகும். முதலாவது இடத்தில் இரஷ்யாவின் Моско́вский метрополите́н, (அட.. மோஸ்கோ மெற்றோ எங்கிறத தான் இரஷ்ய மொழில சொல்லியிருக்கிறம்!) உள்ளது.
உங்களுக்கு தெரியுமா... பரிசில் மேற்கொள்ளப்படும் அனைத்து போக்குவரத்துக்களில் 20% வீதத்தை மெற்றோக்கள் 'கவர்' செய்கின்றன.
உலகில் மிக நீண்ட நடைமேடையை கொண்ட மெற்றோ நிலையம் பரிசில் தான் உள்ளது.
(நாளை)
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025