Paristamil Navigation Paristamil advert login

பிரான்சின் மிகப்பெரிய மருத்துவமனை..!!

பிரான்சின் மிகப்பெரிய மருத்துவமனை..!!

31 ஆடி 2020 வெள்ளி 14:30 | பார்வைகள் : 22273


அந்தப் பெரிய்ய்ய மருத்துவமனை... ஆம் நீங்கள் ஊகித்தது சரிதான். இங்கு பரிசில் தான் உள்ளது. 13ம் வட்டாரத்தில் உள்ள Pitié-Salpêtrière Hospital மருத்துவமனைதான் பிரான்சிலேயே மிகப்பெரிய மருத்துவமனை. அதுபோக உலகில் மிகப்பெரிய மருத்துவமனைகளின் பட்டியலிலும் இதற்கு இடம் உண்டு. 
 
‘போதனா மருத்துவமனை’ வகைக்குள் வரும் இதன் வரலாற்றைக் கேட்டால் நமக்கு தலை சுற்றும். 400 ஆண்டுகளுக்கு முன்னர் வெடிகுண்டுக்கு மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலையாக இது இருந்தது. பின்னர் சிறைச்சாலை ஆகியது. பிறக்கு வேறு வேறு வடிவங்கள் எடுத்து, கடைசியில் மருத்துவமனை ஆகி, இன்று ‘பிரான்சின் மிகப்பெரிய’ எனும் இடத்தைப் பிடித்துள்ளது. 
 
பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் ‘உலகில் மிகப்பெரிய’ மருத்துவமனை இதுதானாம். இன்று சகல வசதிகளுடன் நவீன உபகரணங்கள், மருந்துவகைகளுடன் திகழும் இந்த மருத்துவமனை ஒரு காலத்தில் கொலைக்களமாகவும் இருந்துள்ளது. பல ‘தலைவெட்டி தங்கராசாக்கள்’ தங்கியிருந்த கூடாரமாக இது இருந்தது என்று வரலாறு சொல்கிறது. 
 
உலகில் தலைசிறந்த மருத்துவர்கள் பலர் இங்கு பணிபுரிந்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் விரிவாக வரும் நாட்களில் பேசுவோம்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்