உலகில் மிகபெரிய அழகுசாத கம்பெனி..!

19 ஆவணி 2020 புதன் 12:30 | பார்வைகள் : 24171
பிரான்ஸ் என்றாலே அழகு, ஆடம்பரம், நவீனம், உல்லாசம் தானே..!! இங்கு உற்பத்தியாகும் அழகுசாதனப் பொருட்கள் உலகப் புகழ்பெற்றவை. காரணம் உலகில் மிகப்பெரிய அழகுசாதன கம்பெனியே இங்குதான் உள்ளது. ஆம் நீங்கள் எல்லோரும் அறிந்த ‘L’Oreal’ தான் அந்தக் கம்பெனி.

1909 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் திகதி, யூத இனத்தைச் சேர்ந்த Eugène Schueller என்பவர் இதனை நிறுவினார். அன்றில் இருந்து அமோக வளர்ச்சிதான். ஆண்டுதோறும் பல பில்லியன்களை வருவாயக ஈட்டும் இந்த கம்பெனி, வாசனைப் பொருட்கள், தலைமுடி அழகுப் பொருட்கள், தோலைப் பளபளப்பாக்கும் பொருட்கள் என அழகுக் கலையின் அத்தனை பொருட்களையும் உற்பத்தி செய்கிறது. பெரும் நடிகர், நடிகைகள் தொடக்கம் விஐபிக்கள் எல்லோரும் விரும்பி வாங்கும் ஒரு பெயராக ‘லொறியல்’ இருக்கிறது.
இதன் தலைமையகம் நம் எல்லோருக்கும் நன்கு தெரிந்த Clichy நகரில் உள்ளது. தற்போதைய உரிமையாளர் Françoise Bettencourt Meyers எனும் பெண்மணி ஆவார். இவர் யார் தெரியுமா? 2017 ஆம் ஆண்டில் காலமான, பிரான்சின் மிகப்பெரிய பணக்காரரான Liliane Bettencourt இனது மகளாவார்.
பிரான்ஸுக்கே பெருமை சேர்க்கும் இந்தக் கம்பெனியைச் சுற்றி சர்ச்சைகளும் விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. இன்னொரு பதிவில் அவற்றைப் பார்க்கலாம்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1