பிரான்சில் அதிகளவில் விற்பனையாகும் மகிழுந்து எது தெரியுமா..?

2 கார்த்திகை 2021 செவ்வாய் 14:00 | பார்வைகள் : 24316
இன்றைய பிரெஞ்சு புதினத்தில், பிரான்சில் அதிகளவில் விற்பனையாகும் மகிழுந்து குறித்து பார்க்க உள்ளோம்.
பிரெஞ்சு மக்களுக்கு வெளிநாட்டு நிறுவன மகிழுந்துகள் மீது மோகம் இல்லை. பிரான்சின் Peugeot நிறுவனத்தின் மகிழுந்துகளே பிரான்சில் அதிகளவில் விற்பனையாகிறது. அதிலும் 208 ‘மொடல்’ மகிழுந்துகள் பிரெஞ்சு மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றது.
நீங்கள் வீதி ஒன்றில் நின்றுகொண்டு, போய்வரும் மகிழுந்துகளை எண்ணிப்பார்த்தால், அதில் பத்தில் மூன்று Peugeot நிறுவனத்தின் மகிழுந்துகள் தான் இருக்கும்.
சென்ற 2020 ஆம் ஆண்டு “PEUGEOT 208 II” மொடல் மகிழுந்து தான் அதிகளவில் விற்பனையாகியுள்ளது. இந்த ‘மொடல் மட்டும் 92, 796 மகிழுந்துகள் அவ்வருடத்தில் விற்பனையாகியுள்ளது.
€15, 000 யூரோக்களில் இருந்து புதிய மகிழுந்துகளையும்,‘பாவித்த’ மகிழுந்துகளை வெறும் *€300 யூரோக்களில் இருந்தும் வாங்க கூடியவாறு உள்ளது.
இரண்டாவது இடத்தில் RENAULT CLIO V மகிழுந்து அதிகளவில் விற்பனையாகின்றது. 2020 ஆம் ஆண்டில் 84, 031 மகிழுந்துகள் விற்பனையாகியுள்ளன.
உங்களுக்கு தெரியுமா…?
இவ்வருடத்தின் முதல் கால் ஆண்டில் அதிகளவில் விற்பனையான மகிழுந்தும் PEUGEOT 208 II மொடல் தான். (ஒருவேளை, இந்த வருடமும் முதலாவது இடத்துக்கு வருமோ..?)
இந்த அதிக விற்பனையான மகிழுந்து பட்டியலில், முதல் 30 இடத்தில் BMW, Audi போன்ற எந்த ஒரு நிறுவனங்களும் இடம்பிடிக்கவில்லை.
சுபம்!
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1