பிள்ளைகளை நற்குணமுடையவர்களாக வளர்த்தால் - உங்களுக்கு விருது!

23 கார்த்திகை 2021 செவ்வாய் 11:20 | பார்வைகள் : 25495
இன்றைய பிரெஞ்சு புதினத்தில், குடும்ப தலைவிகளுக்கு.. அதுதான் எங்களது அம்மாக்களுக்கு வழங்கப்படும் ஒரு விருது குறித்து பார்க்கலாம்.
பிரான்சில் வசிக்கும் நீங்கள் நான்கைந்து குழந்தைகளை பெற்று, அவர்களை நல்ல குணமுடையவர்களாக வளர்த்து, சமூகத்தில் போற்றத்தக்கவர்களாக வளர்த்தால், உங்களுக்கு ஒரு ‘விருது’ காத்திருக்கிறது.
அந்த விருதின் பெயர் ‘Médaille de la Famille française’ ஆகும்.
1920 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இந்த விருது முதன் முறையாக அறிவிக்கப்பட்டது.
இந்த விருதிலும் ஒலிம்பிக் பதக்கங்கள் போன்று தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற மூன்று பிரிவு உள்ளது.
இதில் வெண்கல விருது கணவனை இழந்ததன் பின்னர் தங்களது குழந்தைகளை திறம்பட வளர்க்கும் தாயிற்கானது.
ஒரு பேச்சுக்கு உங்களுக்கு எட்டு குழந்தைகள் இருந்தால், அவர்களை நீங்கள் ‘சூப்பராக’ வளர்த்தால் உங்களுக்கு ‘தங்கப்ப தக்கம்’ கிடைக்கும்.
ஆறு குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு வெண்கல பதக்கம் கிடைக்கும்.
‘அட… ஒரு குழந்தைய பெத்து, அத வளர்த்து எடுக்கவே நாக்கு தள்ளுது!” என நீங்கள் புலம்புவது இங்கே கேக்குது!
சுபம்.