30 மில்லியன் பயணச்சிட்டைகளை விற்பனை செய்துள்ள SNCF.,.!!

14 ஆடி 2024 ஞாயிறு 14:25 | பார்வைகள் : 10013
இந்த கோடைகாலத்துக்காக இதுவரை கிட்டத்தட்ட 30 மில்லியன் பயணிச்சிட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக SNCF அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற உள்ளதால் பயணிகள் அனைவரும் தங்களுக்கான பயணச்சிட்டைகள் முற்கூட்டியே பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது., TGV Inoui, Ouigo, Intercités மற்றும் Intercités de nuit ஆகிய சேவைகளைச் சேர்த்து மொத்தமாக இந்த 30 மில்லியன் எண்ணிக்கையை எட்டியிருக்கிறார்கள். இது சென்ற வருடத்தை விட 2% சதவீதம் அதிகமாகும்.
இன்னும் ஏராளமான முன்பதிவுகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டில் ஒரு நுழைவுச் சிட்டைகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை ஓகஸ்ட் மாதங்களில் மேலதிகமாக 400,000 பேர் பயணம் செய்யக்கூடிய ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1