பரிசை வந்தடைந்தது ஒலிம்பிக் தீபம்..!!
14 ஆடி 2024 ஞாயிறு 13:10 | பார்வைகள் : 2645
கடந்த மே மாத ஆரம்பம் முதல் பிரான்சின் அனைத்து பகுதிகளையும் சுற்றி வந்த ஒலிம்பிக் தீபம், இறுதியாக தலைநகர் பரிசை வந்தடைந்தது.
இன்று ஜூலை 14 மற்றும் நாளை 15 ஆம் திகதிகளில் பரிசின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த தீபம் கொண்டுசெல்லப்பட உள்ளது. இன்று சோம்ப்ஸ்-எலிசேக்கு கொண்டுவரப்பட்ட இந்த ஒலிம்பிக் தீபத்தினை பிரான்சின் உதைபந்தாட்ட வீரர் Thierry Henry முதலாவது நபராக பெற்றுக்கொண்டார். அவர் ஒலிம்பிக் தீபத்தினை கைகளில் ஏந்தும் போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
அவரை அடுத்து, அடுத்ததாக தீபம் பிரான்சின் ஒலிம்பிக் வெண்கலக்கிண்ண வெற்றியாளர் judoka Romane Dicko பெற்றுக்கொண்டார். தொடர்ச்சியாக இவ்வாறு ஒலிம்பிக் தீபம் கைமாற்றப்பட்டு நாள் ஒன்றுக்கு 120 பேர் அதனை சுமந்து செல்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஒலிம்பிக் தீபத்தினை சுமப்பவர்களில் ஈழத்தமிழர் தர்சனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.