ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி - அதிர்ச்சியில் ரணில்
14 ஆடி 2024 ஞாயிறு 11:20 | பார்வைகள் : 1191
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி தொடர்பில் அதிர்ச்சியையும் நிம்மதியையும் வெளிப்படுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ட்ரம்ப் பாதுகாப்பாக உள்ளதற்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களும் அரசியல் வன்முறைகளை அனுபவித்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, ஜனநாயகத்தை பாதுகாக்கும் சட்டங்களை பின்பற்றுமாறு அனைவரையும் வலியுறுத்தினார்.
பென்சில்வேனியாவின் பட்லரில் சனிக்கிழமையன்று நடந்த பேரணியில் மேடையை நோக்கி துப்பாக்கிதாரி துப்பாக்கியால் சுட்டதில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காதில் சுடப்பட்டார் - ஒரு பார்வையாளர் இறந்தார், மேலும் இருவர் படுகாயமடைந்தனர் மற்றும் நிகழ்வில் குழப்பத்தை ஏற்படுத்திய ஒரு பயங்கரமான சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.