பரிஸ் : திருநங்கை பெண் படுகொலை... கொலையாளி சொன்ன காரணம்..!!
10 ஆடி 2024 புதன் 09:49 | பார்வைகள் : 13366
திருநங்கை பெண் ஒருவரை கொன்றதாக தெரிவித்து, நபர் ஒருவர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.
Clamart (Hauts-de-Seine) நகர காவல்நிலையத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை காலை வருகை தந்த 22 வயதுடைய ஒருவர், பரிசில் வைத்து அவர் ஒரு பெண்ணைக் கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். அதையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இருந்து சடலம் ஒன்றை மீட்டனர்.
இபம் வயதுடைய திருநங்கை ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
விசாரணைகளின் முடிவில், குறித்த பெண் ஒரு திருநங்கை என்பதை அவருக்கு தெரியாமல் மறைத்ததாகவும், அதன் முடிவில் ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan