Paristamil Navigation Paristamil advert login

பிரச்சாரத்துக்காக சட்டவிரோத நிதி உதவி... மரீன் - லு-பென் மீது விசாரணை..!

பிரச்சாரத்துக்காக சட்டவிரோத நிதி உதவி... மரீன் - லு-பென் மீது விசாரணை..!

10 ஆடி 2024 புதன் 09:00 | பார்வைகள் : 5069


கடந்த 2022 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலின் போது மரீன் - லு - பென் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான சட்டவிரோத நிதி உதவியினை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டு தற்போது மீள தூசு தட்டப்பட்டுள்ளது.

இந்த ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் அது தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இந்த விசரணைகளை பிரான்சின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்படும் நிதி தொடர்பான கண்காணிப்பை மேற்கொள்ளும் தேசிய ஆணையம் (commission nationale des comptes de campagne et des financements politiques) மேற்கொண்டு வருகிறது.

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மக்ரோனுக்கு எதிராக போட்டியிட்ட மரீன் லு பென் தோல்வியினைச் சந்தித்திருந்தார். அதன்போது அவர் சட்டவிரோதமாக நிதி உதவி பெற்றிருந்ததாக சந்தேகிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பில் மரீன் லு பென்னின் வழக்கறிஞரிடம் வினாவிய போது, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்