ராயன் திரைப்படம் தனுஷ்க்கு கைகொடுக்குமா ?
24 ஆடி 2024 புதன் 13:06 | பார்வைகள் : 788
கேப்டன் மில்லர் படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள ராயன் திரைப்படம் வருகிற ஜூலை 26-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
கருப்பு நிறம், ஒல்லியான உடல், அப்பாவி முகம் என நடிகர் தனுஷ் சினிமாவில் அறிமுகமானபோது அவரை உருவகேலி செய்து பல்வேறு விமர்சனங்களும் வந்தன. அதையெல்லாம் சகித்துக்கொண்டு, அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு, தன்னை மெருகேற்றிக் கொண்ட தனுஷ், இன்று இந்திய சினிமாவே பெருமைகொள்ளும் நாயகனாக உயர்ந்து நிற்கிறார். கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை நடித்துவிட்டார். அவருக்கென தனி ரசிகர் படையே உள்ளது.
இப்படி பல்வேறு சிக்கல்களை தாண்டி உச்சம் தொட்டுள்ள தனுஷ், தற்போது தனது 50வது படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்தின் பெயர் ராயன். அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. அப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். கேப்டன் மில்லர் படத்தின் தோல்விக்கு பின்னர் அவர் நடிப்பில் வெளியாகும் படம் இது என்பதால், இப்படத்தின் மூலம் தனுஷ் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ராயன் படத்தில் உள்ள சிறப்பம்சங்கள் சிலவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ராயன் நடிகர் தனுஷின் 50வது படமாகும். இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது மட்டுமின்றி இப்படத்தை இயக்கியும் உள்ளார் தனுஷ். அவர் இயக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.
ராயன் படம் முழுவதும் செட்டில் தான் படமாக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஒரு ஏரியாவையே செட் அமைத்து உருவாக்கினார்களாம். இப்படத்தின் செட் அமைக்கும் பணிகளுக்கு மட்டும் ரூ.30 கோடி செலவானதாக கூறப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் இதற்கு முன்னர் மரியான், அட்ரங்கி ரே, ராஞ்சனா போன்ற படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தாலும் தனுஷ் இயக்கும் படத்திற்கு அவர் இசையமைப்பது இதுவே முதன்முறை ஆகும்.
ராயன் படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து சண்டைக்காட்சிகளும் டூப் இன்றி தான் படமாக்கப்பட்டு உள்ளதாம். தனுஷ் மட்டுமின்றி நடிகை துஷாரா விஜயனும் டூப் போடாமல் நடித்து ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறாராம்.
மாரி 2 படத்தில் தனுஷ் ஆடிய ரெளடி பேபி பாடலுக்கு கோரியோகிராபி செய்திருந்த பிரபுதேவா, ராயன் படத்திலும் அடங்காத அசுரன் பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.