விஜய் வெளியிட்ட 'அந்தகன்' ஆன்ந்தம்..!
24 ஆடி 2024 புதன் 13:13 | பார்வைகள் : 1246
பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடலை தளபதி விஜய் வெளியிடுவதாக ஏற்கனவே செய்தி வெளியானது. இந்த நிலையில் அந்த பாடல் தற்போது வெளிவந்துள்ள நிலையில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
டாப் ஸ்டார் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரகனி, யோகி பாபு, ஊர்வசி, கேஎஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார் லீலா சாம்சன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘அந்தகன்’.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பே தயாரான நிலையில் தற்போது தான் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் புரமோஷன் பணிகளும் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் ‘அந்தகன்’ ஆன்ந்தம் என்ற ப்ரோமோ பாடல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடலை தளபதி விஜய் வெளியிட்ட காட்சிகளுடன் பாடல் தொடங்குகிறது. இந்த பாடலை அனிருத் மற்றும் விஜய் சேதுபதி பாடி இருக்க உமாதேவி, ஏகாதேசி ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.