Paristamil Navigation Paristamil advert login

ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்படத்திற்குத் தடை!

ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்படத்திற்குத் தடை!

23 ஆடி 2024 செவ்வாய் 15:34 | பார்வைகள் : 711


நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் மிகவும் முக்கியமான நடிகைகளில் ஒருவராகத் திகழ்கின்றார்.

இவர் மலையாளத்தில் தற்போது அஜயந்தே ரண்டம் மோஷனம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர ஜித்தின் லால் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக டொவினோ தாமஸ் நடித்துள்ளார்.

இவர் தமிழில் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அஜயந்தே ரண்டம் மோஷனம் திரைப்படத்தைத் திரைக்குக் கொண்டுவர பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த வைத்தியர் வினித் என்பவர் இந்த திரைப் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கில் படத்தைத் தயாரிக்க தன்னிடம் இந்திய ரூபாயில் 3.20 கோடி பெற்று ஏமாற்றி விட்டனர் எனவும், ஆகவே இந்தத் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்