மத்திய பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?
23 ஆடி 2024 செவ்வாய் 15:25 | பார்வைகள் : 774
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்டில் இன்று (ஜூலை 23) பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
வரவு
இதில், கடன்கள் மற்றும் பிற சொத்துகள் மூலமாக 27 சதவீதமும், வருமான வரி மூலமாக 19 சதவீதமும், ஜி.எஸ்.டி மற்றும் இதர வரிகள் மூலமாக 18 சதவீதமும், வர்த்தக வரி மூலமாக 17 சதவீதமும், வரி அல்லாத ரசீதுகள் மூலமாக 9 சதவீதமும், தொழிற்சங்க கலால் வரிகள் மூலமாக 5 சதவீதமும், சுங்க வரிகள் மூலமாக 4 சதவீதமும், கடன் அல்லாத மூலதன ரசீதுகள் மூலமாக ஒரு சதவீதமும் வருவாய் மத்திய அரசுக்கு கிடைக்கிறது.
செலவு
அதேபோல், வட்டி கட்டுவதற்காக 19 சதவீதமும், மாநிலங்களுக்கான வரி பகிர்வுக்காக 21 சதவீதமும், மத்திய அரசின் திட்டங்களுக்காக 16 சதவீதமும், நிதி குழு ஒதுக்கீடுகள் மற்றும் இதர செலவினங்களுக்காக தலா 9 சதவீதமும், பாதுகாப்புத்துறை, மத்திய நிதியுதவி திட்டங்களுக்காக தலா 8 சதவீதமும், மானியங்களுக்காக 6 சதவீதமும், ஓய்வூதியத்திற்காக 4 சதவீதமும் செலவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.