வைத்தியர் அர்ச்சுனா பேராதனைக்கு இடமாற்றம்
23 ஆடி 2024 செவ்வாய் 15:51 | பார்வைகள் : 1353
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றியிருந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்றிலிருந்து பேராதனை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார்.
அண்மை நாட்களாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக இருந்து மருத்துவர்களது குறைபாடுகள் தொடர்பாகவும், நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாகவும் முறைகேடுகளைச் சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் எந்தவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.