Paristamil Navigation Paristamil advert login

இன்ஸ்டாகிராமில் இனி இசை புரட்சி - புதிய அப்டேட் 

இன்ஸ்டாகிராமில் இனி இசை புரட்சி - புதிய அப்டேட் 

21 ஆடி 2024 ஞாயிறு 08:12 | பார்வைகள் : 5390


ரீல்ஸ் பிரியர்களை கூடுதலாக கவரும் வண்ணம் இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம்(Instagram) வெளியிட்டுள்ள இந்த புதிய அப்டேட்டின் மூலம், இனி ஒரு ரீலில் ஒன்றுக்கு மேற்பட்ட இசை துணுக்குகளை சேர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு ரீல்ஸில் அதிகபட்சமாக 20 இசை துணுக்குகள்(20 Audio Tracks) வரை சேர்க்க முடியும் என்றும், ஒவ்வொரு இசை துணுக்குகளும் எந்த நேரத்தில் இயங்க வேண்டும் என்பதையும் துல்லியமாக அமைத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அம்சத்தின் மூலம் தனித்துவமான புதிய இசை கலவையை உருவாக்கலாம் என்றும், அதனை Save செய்து மற்றவர்களும் அதை ரீல்ஸ்களில் பயன்படுத்தி கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சம் இன்ஸ்டாகிராமில் கதை சொல்லுதல் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கான புதிய வாய்ப்புகளை திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்