Paristamil Navigation Paristamil advert login

வனிதா விஜயகுமார் அடுத்த திருமணத்திற்கும் தயாராகி விட்டாரா..?

வனிதா விஜயகுமார் அடுத்த திருமணத்திற்கும் தயாராகி விட்டாரா..?

17 ஆடி 2024 புதன் 13:10 | பார்வைகள் : 1068


வனிதா விஜயகுமார் இரண்டு மண வாழ்க்கையில் தோல்வியை சந்தித்ததை அடுத்து பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷயங்களும் விவகாரங்களும் உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

அந்த நபர் இறந்த பிறகு அடக்கி வாசித்து வந்த வனிதா தற்போது அடுத்த திருமணத்தை உறுதிப்படுத்தி இருப்பதை அடுத்து மாப்பிள்ளை இவர அவரா? இவரா? என்று பல்வேறு கேள்விகள் இணையங்களில் எழுந்துள்ளது.

ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகளை வைத்திருக்கக் கூடிய நிலையில் இது போன்ற திருமணங்கள் இவருக்கு தேவை தானா? என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருவதோடு இன்று திருமணமாவது நிலைத்து நிற்குமா? என்ற கேள்வியையும் முன் வைத்து இருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இதெல்லாம் ஒரு பொழப்பா? என்று கேட்கக் கூடிய வகையில் அவரை கழுவி ஊற்றியுள்ள நிலையில் இவர் ஏன் மீண்டும் மீண்டும் இது போல செயல்படுகிறார் என்பது தெரியாமல் அனைவரும் திகைத்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய அடுத்த திருமணம் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று பதில் அளித்திருக்கிறார்.

அதன் மூலம் மறைமுகமாக அடுத்த திருமணத்திற்கு தயாராகி விட்டதை உறுதிப்படுத்தி இருக்கிறார் வனிதா விஜயகுமார் எங்க வீதியில் பல்வேறு வகையான விமர்சனங்கள் தற்போது இணையம் எங்கும் உலா வர ஆரம்பித்துவிட்டது.

இதனை தொடர்ந்து மாப்பிள்ளை இவரா..? அவரா..? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்