Bagnolet : துப்பாக்கிச்சூடு... ஒருவர் பலி..!!

15 ஆடி 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 8659
Bagnolet (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், cité de la Capsulerie பகுதியில் வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றிருந்தது. நீண்ட நாட்களாக அங்கு போதைப்பொருள் விற்பனை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் 3 மணிக்கு அங்கு ஸ்கூட்டர் ஒன்றில் வருகை தந்த இருவர், அப்பகுதியில் காத்திருந்த ஒருவரை துப்பாக்கியில் சுட்டனர். இதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்டவர் 30 வயதுடையவர் எனவும், இதே நபர் முன்னதாக இரண்டு தடவைகள் கொலை முயற்சிக்குள் சிக்கி, உயிர் தப்பியிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025