Paristamil Navigation Paristamil advert login

Hôtel de Ville இல் வைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் தீபம்..!

Hôtel de Ville இல் வைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் தீபம்..!

15 ஆடி 2024 திங்கள் 06:00 | பார்வைகள் : 2002


நேற்று ஜூலை 14, ஞாயிற்றுக்கிழமை பரிசின் பல பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்ட ஒலிம்பிக் தீபம், இறுதியாக Hôtel de Ville இல் வைக்கப்பட்டது.

பரிசில் இரண்டு நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஒலிம்பிக் தீபத்தின் சுற்றுப்பயணம் இன்று 15 ஆம் திகதி திங்கட்கிழமையும் இடம்பெற உள்ளது. நேற்றைய நாளின் இறுதி நபராக பிரெஞ்சு டென்னிஸ் வீரர் Yannick Noah அதனை சுமந்திருந்தார். 

பின்னர், இன்று திங்கட்கிழமை காலை 8 மணி அளவில் பரிஸ் 18 ஆம் வட்டாரத்தின் Arena Porte de la Chapelle பகுதிக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து இன்றைய நாளுக்கான சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. 

இரவு 8.45 மணி அளவில் இறுதியாக place de la République (10 ஆம் வட்டாரம்) இற்கு கொண்டுசெல்லப்படுவதுடன் ஒலிம்பிக் தீபத்தின் சுற்றுலா நிறைவுக்கு வருகிறது. 

ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பநாள் நிகழ்வு இம்மாதம் 26 ஆம் திகதி கோலாகலமாக இடம்பெற உள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்