பிரான்ஸ் மக்கள் தொகையில் 48.6% மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியாது.

11 ஆனி 2024 செவ்வாய் 12:18 | பார்வைகள் : 10174
நடந்து முடிந்த ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் பிரான்ஸ் மக்கள் தொகையில் 48.6% சதவீத மக்கள் வாக்களிக்கவில்லை. இந்த நிலையில் வரும் ஜூன் 30, ஜூலை 7 திகதிகளில் நடைபெறவுள்ள பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் வாக்களிக்க விரும்பினால் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள முடியுமா? எனும் கேள்வி எழுந்துள்ளது.
காரணம் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளது. இந்த கால அவகாசம் போதுமானதாக இருக்கிறதா என்பதே குறித்த கேள்வி எழக் காரணமாகும்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையம் "நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடக்கிறது இதனால் இனிவரும் காலங்கள் போதாது எனவே ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட வாக்காளர் பதிவு தேதியில் அதாவது மே 3ம் திகதியில் இருந்து ஜுன் 9 திகதி வரையான காலப்பகுதியில் பதிந்தவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்" என தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் மக்கள் தொகையில் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தவறிய 48.6% சதவீத மக்கள் தொகையில் கணிசமானவர்கள் வாக்காளர் பதிவில் இருந்தும் வாக்களிக்க முயற்சிக்காதவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3